மீண்டும் அடியெடுத்துவைக்கும் மாதவன் - மீரா ஜாஸ்மீன் ஜோடி.! - Seithipunal
Seithipunal


மீண்டும் அடியெடுத்துவைக்கும் மாதவன் - மீரா ஜாஸ்மீன் ஜோடி.!

90'ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான "ரன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தனது நடிப்பால் இப்படத்தின் மூலம் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில் நடித்த மாதவன் – மீரா ஜாஸ்மின் ஜோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஜோடியாகவும், கொண்டாடப்பட்ட ஜோடியாகவும் மாறியது.

இதையடுத்து, நடிகர் விஜய் உடன் 'புதிய கீதை', அஜித்துடன் 'ஆஞ்சநேயா' உள்ளிட்ட படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தார். ஆனால் இவ்விரு படங்களும் அவருக்கு தோல்வி படங்களாக அமைந்தன. அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `ஆயுத எழுத்து' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், மீரா ஜாஸ்மின் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ’டெஸ்ட்’ படத்தில், முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஏற்கெனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின் இணையும் தகவலை போஸ்டர் மூலம் பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor meera jashmin acting in test movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->