நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா குறித்து விசாரித்த தந்தை! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான படம் 'குஷி'. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. 

இந்த படத்தின் பிரமோஷனுகாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா வரவில்லையா என முன்னாள் மருமகளை பற்றி நலம் விசாரித்தார். 

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டு 4 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து ஆனது. 

தசை அலர்ஜி காரணமாக நடிகை சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வெடுத்து கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் 42 வது இந்திய தின விழா நியூயார்க் நகரில் நடைபெற்றது. அதில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். கலிபோர்னியா உள்ளிட்டா பல இடங்களுக்கு சென்று அவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் இரவு இந்தியா திரும்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Nagarjuna inquired ex daughter in law


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->