'கூலி' படத்தில் இணைந்த நடிகர் நாகார்ஜுனா! எக்ஸ் தலத்தில் மகிழ்ச்சி பதிவு! - Seithipunal
Seithipunal


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171 படமாக 'கூலி' உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில்,இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை ஒவ்வொருவராக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கூலி படத்தில் இணைந்தார். இதில் அவர் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன்பின், தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் குபேரா படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா 'சைமன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அவரது 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'கூலி' படத்தில் இணைந்தது குறித்து நடிகர் நாகார்ஜுனா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'நன்றி லோகி. 'கைதி' படத்தில் இருந்தே உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தேன். புதிய படத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளது. அதுவும் தலைவருடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Nagarjuna joined the film Coolie Happy posting on site X


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->