டெல்லி கணேஷ் சார் மறைவு எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு - நடிகர் பார்த்திபன் உருக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு மரணம் அடைந்தார்.

இதையடுத்து டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு, நடிகர் பார்த்திபன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் டெல்லி கணேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-

டெல்லி கணேஷ் ஒரு இயல்பான மனிதர். மிகச் சிறந்த நடிப்பாளர். தனிப்பட்ட திறமை கொண்டவர். வாழ்நாள் முழுவதும் அவர் நல்ல படங்களில் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் சாருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்பட்டேன்; அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை; இது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor parthiban tribute delhi ganesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->