சைஃப் அலி கான் வழக்கில் திருப்பம்! கைரேகை குழப்பத்தால் பதற்றத்தில் மும்பை போலீஸ்!
saif ali khan fingerprints Bangladesh Mumbai Police
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த சம்பவத்தில் முகமது ஷரிபுல் என்ற வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். தாயின் மருத்துவ செலவுக்காக திருட முயன்றதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டதாகவும் ஷரிபுல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், ஷரிபுல்லின் தந்தை, சிசிடிவியில் பதிவானது தனது மகன் இல்லை என்றும், அவரை தவறாக கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தடயவியல் சோதனையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சைஃப் அலிகான் வீட்டில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில் எதுவும் ஷரிபுல்லின் கைரேகையுடன் பொருந்தவில்லை என்று மாநில குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் மும்பை போலீசார் கூடுதல் கைரேகை மாதிரிகளை மீண்டும் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்தத் தகவலால் வழக்கில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
English Summary
saif ali khan fingerprints Bangladesh Mumbai Police