முன்னாள் பிரதமர் உருவாக்கிய அஸ்திவாரத்தில் தான் பாஜக பயணம் செய்கிறது.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள புதூரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

"நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சியில் உள்ளது. ஆனால் நாட்டின் குடிமக்களுக்கான ஆட்சியாக அமைந்துள்ளதா? என்றால் அது கிடையாது. பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று நரேந்திரமோடி கூறி வருகிறார். 

இது ஏற்புடையதல்ல. காரணம், அவருக்கு முன்னால் ஆட்சி செய்த ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் உருவாக்கிய அஸ்திவாரத்தில் தான் பாஜக இன்று பயணம் செய்து வருகிறது.

நமது நாட்டில் 144 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 20 கோடி பேர் ஏழைகளாக உள்ளனர். ஏழைகளின் விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றுவதில்லை. 

ஆனால் பெரு முதலாளிகள் வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்கிறது. தற்போது, அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பாஜக பேராபத்து வந்துள்ளது. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p chithambaram speech about bjp party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->