இந்திய அணிக்கு தற்போது ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்துள்ளார்..திலக் வர்மாவை பாராட்டிய ராயுடு! - Seithipunal
Seithipunal


 இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ள சூப்பர் ஸ்டார் திலக் வர்மாதான் அவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ராயுடு பாராட்டியுள்ளார்.  .

 இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த போட்டியில் இதில் 166 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி ஓவரில்  திலக் வர்மா முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து இலக்கை எட்ட வைத்தார். 72 ரன்கள் (55 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) திரட்டிய அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் வீரர் திலக் வர்மா என்று முன்னாள் வீரர் ராயுடு பாராட்டியுள்ளார். மேலும் அவரை மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாட வைக்க வேண்டும் என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது :- "திலக் வர்மா ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் வீரர் என்றும் அவரை நான் சிறிய வயதிலிருந்து பார்த்து வருகிறேன் என்றும் அவர் அப்போதிலிருந்து மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார் என கூறினார். 

மேலும் தற்போது அவர் இந்திய அணிக்காகவும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ள ராயுடு,சூர்யகுமார் யாதவ் கேப்டனான பிறகு அவருக்கு இன்னும் உத்வேகம் அதிகரித்துள்ளது என்றும்  சூரியகுமார் யாதவின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக திலக் வர்மா அற்புதமான பேட்டியை வெளிப்படுத்தி வருகிறார் என கூறியுள்ளார் . மேலும் இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ள சூப்பர் ஸ்டார் திலக் வர்மாதான் அவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்க்க வேண்டும் என்றும் அவரிடம் அந்த அளவிற்கு மிகச்சிறப்பான திறமை உள்ளது என்றும்  மூன்று வகையான இந்திய அணியிலும் அவரால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும்" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Indian team has got a superstar now Rayudu praises Tilak Varma


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->