அவர் அரசியலுக்கு வரமாட்டார்... திரிஷா அம்மா விளக்கம்!
He will not enter politics Trisha's mother explained
"திரிஷா அரசியலுக்கு வரவில்லை என்றும் சினிமாவில் தொடர்வார் என்றும் இது தொடர்பாக பரவி வரும் செய்திகள் எதுவும் உணமையில்லை என திரிஷவின் அம்மா விளக்கமளித்துள்ளார்.
'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை திரிஷா,.முன்னதாக 2002-ம் ஆண்டு வெளியான அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் நடிகை திரிஷாவுக்கு முதல் திரை களமாக அமைந்ததை யாரும் மறுக்கமுடியாது.
அதனை தொடர்ந்து 'ஜோடி' உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் திரிஷா நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் திரிஷா சினிமாவைவிட்டு விலகி அரசியலுக்கு செல்ல உள்ளதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், திரிஷவின் அம்மா அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "திரிஷா அரசியலுக்கு வரவில்லை என்றும் சினிமாவில் தொடர்வார் என்றும் இது தொடர்பாக பரவி வரும் செய்திகள் எதுவும் உணமையில்லை என விளக்கமளித்துள்ளார்.
English Summary
He will not enter politics Trisha's mother explained