விஜயின் கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தின் 02வது லுக் வெளியீடு; இணையத்தில் வைரல்..! - Seithipunal
Seithipunal


 குடியரசு தினத்தை முன்னிட்டு 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களுடன், 'அனிமல் மற்றும் கங்குவா' படத்தில் வில்லனாக நடித்த  பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படமாகும். இப்படத்திற்கு  அனிருத் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும தயாரிக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. 

'ஜன நாயகன்' படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.  முதல் போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது.

தற்போது  'ஜன நாயகன்' படத்தின் 02வது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இது கருப்பு சிவப்பு நிறத்தில் வெளியாகியுள்ளது. அது பிரபல  அரசியல் கட்சி ஒன்றை குறிப்பது போல உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். 

அதிலும் "நான் ஆணை யிட்டால்" என்ற வாசகம் MGR  அவர்களை நினைவு படுத்துவது போலவும், சாட்டை எடுத்து சுழற்றுவது போன்ற போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

https://x.com/KvnProductions/status/1883462558604230824


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jananayagan 02nd look release


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->