இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது -நடிகர் பார்த்திபன்.! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் செய்ததை சுட்டிக்காட்டி நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இது குறித்து சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திருமாவளவன் பிறந்தநாள் மேடையில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அதில் அவர், "ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றும் வரலாறு மாற்றப்படுகிறது" என பேசி இருந்தார்.

இதை கேட்ட பலரும் அவர் இந்து தான். அதனால் தான் அவர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டி இருக்கிறார். எப்படி அவரை இந்து இல்லை என்று கூற முடியும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் உலக அளவில் இதுவரை மொத்தம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இதனையடுத்து 400 கோடி வசூல் செய்ததை குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது. இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு(இ)ப்பலாம்! எழுப்பினால்.. இன்னும் கூடுதலாக ஒரு 100 கோடி வசூல் செய்யும்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Parthipan tweet about ponniyin Selvan collected 400crs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->