வெளியானது 2025 ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள்.! - Seithipunal
Seithipunal


ஆண்டு தோறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். அதற்கான பட்டியலும் முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25-ந்தேதி வரை மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் ஆகும். அதிலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும்.

 

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ஜனவரி மாதம் ஐந்து நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் உள்ளிட்ட மாதங்களில் தலா நான்கு நாட்கள் பொது விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதி வணிகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொது விடுமுறையாகும். 

குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய பொது விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public holiday announce for 2025 year


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->