நடிகர் சங்க நிர்வாகிகளின் ராஜினாமா கோழைத்தனம் - நடிகை பார்வதி திருவோத்து காட்டம்! - Seithipunal
Seithipunal


கேரள திரைத்துறையில் நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்களை ஹேமா குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர்.

மேலும், பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர். மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை பார்வதி திருவோத்து, மலையாள திரைப்பட சங்கத்தில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாகவும்,  நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா என்ற செய்தியை கேட்டவுடன் நான் முதலில் இது எவ்வளவு கோழைத்தனம் என்று தான் நினைத்தேன் என்று தெரிவித்துள்ள அவர், குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்து அவர்கள் கோழைத்தனமாக விலக்கிச் செல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  அவர்களின் இந்த செயலால் மீண்டும் நம் மீது பொறுப்பு விழுகிறது. பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்றும், பெண்களால் ஏற்படாத பிரச்சனைகளுக்கான பொறுப்பு எப்போதும் பெண்களின் மீதே சுமத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்,
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Parvathy Thiruvothu Gattams resignation is cowardice


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->