அம்மா மருந்தகம் தொடர்ந்து இயங்கும், மூடப்படாது; கூட்டுறவுத்துறை தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!
Amma pharmacies will not be closed
அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படும் என கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் முதல்வர் மருந்தகம் மற்றும் நியாய விலைக் கடைகள், சிங்காரத்தோப்பு அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மற்றும் மொத்த விற்பனை பண்டக சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்தில் அவர் பேசும் போது; "முதல்வர் மருந்தகம் என்ற புரட்சிகரமான திட்டத்தின்படி ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திட்டம் விரைவில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும், அம்மா மருந்தகங்கள் மூடப்படாது. இவை இரண்டும் தொடர்ந்து செயல்படும்" என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
English Summary
Amma pharmacies will not be closed