பேரனின் காதணி விழாவிற்க்காக கோவையில் நடிகர் ரஜினிகாந்த்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
Actor Rajinikanth Coimbatore grandson earring ceremony
கோவையில் நடிகர் ரஜினியின் பேரனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெற உள்ளதால் அவர் இன்று விமானம் மூலம் கோவை சென்றிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவரது கணவர் விசாகன். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊர் கோவை சூலூர் என்பதால் குழந்தைக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா இன்று சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகன் குடும்பத்தினர் மட்டுமே பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழாவில் கலந்து கொண்டனர்.
பேரனின் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று ரஜினிகாந்த் கோவைக்கு விமானம் மூலம் வந்திருந்தார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கார் மூலம் சூலூர் புறப்பட்டு சென்றார்.
English Summary
Actor Rajinikanth Coimbatore grandson earring ceremony