வைரல் வீடியோ! IPL: பயிற்சியின் போது நடனமாடிய விராட் கோலி...!
Viral video IPL Virat Kohli dances during training
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஐ.பி.எல்-ன் 18-வது சீசன் டி20 தொடர் இந்த வருடம் நடைபெறவுள்ளது.இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் எதிர்கொள்கிறது.

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி களமிறங்கவுள்ளது. இன்னும் ஐபிஎல் தொடர் தொடங்க 5 நாட்களே உள்ளதால், அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு, ஆர்.சி.பி அணி வீரர்களுடன் இணைந்து விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.இதன் பயிற்சியின்போது விராட் கோலி ஜாலியாக நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதனால் விராட் கோலி ரசிகர்கள் அந்த நடன விடியோவை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தும் பல கமெண்ட்கள் பதிவு செய்தும் வருகின்றனர்.
English Summary
Viral video IPL Virat Kohli dances during training