மகளுடன் கலக்கும் நடிகை ரம்பா - வைரலாகும் புகைப்படம்.!
actor ramba and daughter lavanya photos viral in social medias
தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. நடிகர் ரஜினி, விஜய், அஜித் எனப் பல முன்னணி பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு தற்போது குடும்பம், குழந்தைகள், நடன ரியாலிட்டி நிகழ்ச்சி என்று பிஸியாக வலம் வருகிறார்.
![](https://img.seithipunal.com/media/ramba daughter 1-79e8f.png)
இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்திரகுமார் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சாஷா, என்ற இரு மகள்களும் ஷிவின் என்கிற மகன் ஒருவரும் உள்ளனர்.
இதில் மூத்த மகள் லாவண்யா ரம்பாவைப் போலவே இருப்பார். தற்போது 13 வயதாகக் கூடிய லாவண்யா மாடர்ன் உடையில் ரம்பாவுடன் செம கியூட்டான புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனை ரம்பா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்க, ‘சினிமாவுக்கு அடுத்த வாரிசு ரெடி’ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
actor ramba and daughter lavanya photos viral in social medias