அமெரிக்கா விமானம் அமர்தசரசில் தரையிறங்குவதால் பஞ்சாப்பிற்கு அவமானம்; பக்வந்த் மன் கோபத்தில் கொந்தளிப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. இவ்வாறு இந்தியாவை சேர்ந்தவர்களை அந்நாடு நாடு கடத்தியுள்ளது. 

இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என அம்மாநில முதல்வர் பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அந்த விமானங்களை  பஞ்சாப்பில் தரையிறக்குவது, மாநிலத்தை அவமானப்படுத்த முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த இந்தியர்களில் 104 பேர் முதற்கட்டமாக அந்நாடு இந்தியாவுக்கு நாடு கடத்தியது. கடந்த 05-ஆம் தேதி அவர்கள் வந்த விமானம், பஞ்சாபின் அமர்தசரசில் தரையிறங்கியது. 02-வது விமானமும் பஞ்சாபில் நாளை தரையிறங்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களுடன் வரும் விமானம் நாளை அமிர்தசரசில் தரையிறங்குகிறது. 

இந்த விமானத்தை அமிர்தசரசில் தரையிறக்குவதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் கூற வேண்டும். பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சந்திக்கும் போது, இந்தியர்கள் கையில் விலங்கை அந்நாட்டு அதிகாரிகள் போட்டிருக்க வேண்டுமா?இதுதான் டிரம்ப் தரும் பரிசா? என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 05-ஆம் தேதி வந்த முதல் விமானத்தில் வந்தவர்கள் பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அந்த விமானத்தை ஆமதாபாத்திற்கு அனுப்பி வைக்காமல், அமிர்தசரசில் தரையிறக்கியது ஏன்? இது பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அமிர்தசரஸ் நகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bhagwant Manns agitation says that it is a shame for Punjab that the US plane is landing in Amritsar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->