ரிஷப ராசியில் பிறந்தவர்களை சண்டைக்கு இழுக்காதீங்க.. நீங்க அவ்ளோதான்..!
Common characteristics of people born under the Taurus zodiac sign
12 ராசிகளில் இரண்டாவது ராசி ரிஷபம். இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான். ரிஷப ராசியில் கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருக சீரிஷம் 1,2-ஆம் பாதங்கள் ஆகியவை அடங்கும். இந்த ரிஷப ராசியில் பிறந்தவர்களின் பொதுவான குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவரும் வண்ணம் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். அதுபோல நல்ல கம்பீரமான தோற்றமும், நடுத்தரமான உயரமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது சர்வ லட்சனங்களும் பொருந்தியவர்களாக மற்றும் சாமுந்திரிகா லட்சணம் உடையவர்கள் என்றும் சொல்லலாம்.
![](https://img.seithipunal.com/media/RISHABAM-6pehj.jpg)
பொதுவாகவே ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாக சாதுவான குணத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் சண்டை என்று வந்தால் இவர்களை சமாளிப்பதும், வீழ்த்துவதும் மிகவும் கடினம். இவர்களை நம்பி எந்த விஷயத்தை ஒப்படைத்தாலும் அதில் தனி அக்கறை செலுத்தி பொறுப்பாக இருந்து செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு சுயநலமாக இருபது பிடிக்கவே பிடிக்காது.
இந்த ராசிகாரர்கள் சாமர்த்தியமாகவும் அதே நேரம் வேடிக்கையாகவும் பேசுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள் இவர்கள். பொதுவாக கூச்ச சுபாவமுடையவர்களாக இருந்தாலும், அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். எப்போதும் சுத்தமாக இருக்க விரும்புவார்கள். கஷ்டம் வந்துவிட்டால் அதைதாங்க கூடிய பொறுமையும், சகிப்புதன்மையும் கொண்தவர்களாக இருப்பார்கள்.
![](https://img.seithipunal.com/media/RISHABAM 21-8he5a.jpg)
எல்லோரையும் அனுசரித்து செல்லும் இவர்கள், அம்மாவின்மீது அளவு கடந்த அன்பை கொண்டிருப்பார்கள். யாரையும் தேவையில்லாமல் பகைத்து கொள்ள மாட்டார்கள். இயற்கையை ரசித்து, இயற்கை சூழ்நிலையை அதிகம் விரும்புவார்கள். சிறுவயதில் இருந்தே குடும்ப பொறுப்பை சுமப்பார்கள். இவர்களில் பெரும்பலோனருக்கு திருமணம் காலம் தாழ்ந்துதான் நடைபெறும்.
அத்துடன், இந்த ரிஷப ராசிகாரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். கலைத்துறை, மற்றும் இசைத்துறையில் அதிக நாட்டம் கொண்டவர்கள். இவர்களுக்கு மத்திய வயதில் தான் சுக போகமான வாழ்வு அமையும். இவர்கள் மற்றவர்களுக்கு வழிய உதவி செய்வதால் சில சமயங்களில் பிரச்சனைகளில் சிக்கி கொள்வார்கள்.
English Summary
Common characteristics of people born under the Taurus zodiac sign