மார்ச்- இல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியஸ்..!
Sunita Williams to return to Earth in March
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். இவருடன் புட்ச் வில்மோர் என்ற இன்னொரு விண்வெளி வீரரும் சிக்கியுள்ளார். இவர்கள் இவருவரும் மார்ச் 19-இல் பூமிக்கு திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
08 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு, நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வு பணிக்காக சென்றனர். ஆனால், அவர்கள் சென்ற ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி கூட்டத்தில் கடந்த 08 மாதங்களாக பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/sunitaa-n32r9.jpg)
இந்நிலையில், இவர்கள் இருவரும் மார்ச் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வ்ரும் மார்ச் 12-ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு 10 சர்வதேச விண்வெளி மையத்திற்கு கிளம்புகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தில் இணைப்பானதும், அதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சர்வதேச விண்வெளி மையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பில் உள்ளார். அந்த பொறுப்புகளை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து, அவர் மார்ச் 19-இல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பவுள்ளார். அத்துடன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் அதிக நேரம் 'ஸ்பேஸ்- வாக்' நபர் என்ற சாதனையும் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Sunita Williams to return to Earth in March