பிரபல நடிகர் ஆர்.கே மனைவியை கட்டிப்போட்டு.. 200 சவரன் தங்க நகை கொள்ளை.! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 'எல்லாம் அவன் செயல்' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ராதாகிருஷ்ணன். இவர் சென்னை நந்தம்பாக்கம் அருகே டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது பின்பக்க வழியாக வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். 

மேலும், அவரை கட்டிப் போட்டுவிட்டு வீட்டிலிருந்த 200 சவரன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor RK house properties theft unknown persons


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->