பிறந்தநாளில் சர்ச்சையைக் கிளப்பிய நடிகர் சஞ்சய் தத்தின் போஸ்டர்கள்.! - Seithipunal
Seithipunal


பிறந்தநாளில் சர்சையைக் கிளப்பிய நடிகர் சஞ்சய் தத்தின் போஸ்டர்கள்.!

பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். இவர் இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ராம் பொதினேனியின் அடுத்த படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ மற்றும் நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகியுள்ளன. 

அவற்றில் டபுஸ் ஐஸ்மார்ட்’ படத்தில் ‘பிக் புல்’ என்ற சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் சஞ்சய் தத் புகைபிடித்தவாறு உள்ளார்.

அதேபோன்று, ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்தின் பெயர் "ஆண்டனி தாஸ்" என்று படக்குழு அவரது பிறந்தநாளுக்காக கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது. இதிலும் சஞ்சய் தத் புகைபிடித்தபடி வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 "நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து மீண்டு வந்தவர் சஞ்சய் தத், எதற்காக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும்? அதிலும் அவரது பிறந்தநாளன்றே, இது போன்ற போஸ்டர்கள் வெளியாவது அதிருப்தி அடைய செய்துள்ளது" என்று பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sanjay dutt movie postars controvacy on his birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->