கடும் பனி மூட்டம் - தலைநகரில் போக்குவரத்து பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கடும் பனிமூட்டத்திலும் டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து பெரும்பாலான ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றன. 

ஆனால், பல்வேறு ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், மிதமான பனிமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குளிர் நீடிப்பதால் நகரம் முழுவதும் அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டுள்ளது. அதாவது, அயோத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight and train service affected in delhi for snow fall


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->