படப்பிடிப்பில் தீ விபத்து - முன்னணி நடிகை படுகாயம்.! - Seithipunal
Seithipunal


வங்காள தேசத்தைச் சேர்ந்த ஷர்மீன் அகீ என்பவர் 'சின்சியர்லி யுவர்ஸ்', 'டாக்கா', 'பைஷே ஸ்ரபோன்' மற்றும் 'பாண்டினி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து, அதன் மூலம் வங்காளதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

இந்த நிலையில் இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது இவர் இருந்த மேக்கப் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

இதையறிந்த, படக்குழுவினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அவருடைய நிலை மோசமாக போனதால், அவர் மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரது ரத்தத்தில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்துள்ளதால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sharmeen akhee injury in shooting spot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->