எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலி ஆரம்பம்..சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு!  - Seithipunal
Seithipunal


சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என்றும்  விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம்  மாவட்டம்,எடப்பாடி தொகுதியில், அதிமுக முன்னாள் முதல்-அமைச்சர் பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது இவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சேலம் நீதிமன்றத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த  வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும் என்றும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் என்று சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இதனை எதிர்த்து அதிமுக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், சேலம் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து இருந்தது அப்போது . மேலும் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி போலீசார் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன், அதிமுக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என்றும் விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியாக அமைத்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami has a headache Chennai High Court Issues New Order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->