பாட்னரின் பிறந்தநாளில் காதலை வெளிப்படுத்திய நடிகர் சித்தார்த்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2021ம் ஆண்டு வெளியான "மகாசமுத்திரம்" என்ற படத்தில் நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அதாவது, பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண நிச்சயதார்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருவரும் சேர்ந்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் காதலிப்பதாக உறுதிபடுத்தவில்லை என்றாலும் காதலிக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நடிகை அதிதி ராவ் ஹைதாரி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு நடிகர் சித்தார்த் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- "அதிதியின் தோளில் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "பார்ட்னர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஆங்கிலத்தில் கவிதை ஒன்றையும் எழுதி இருந்தார். அதற்கு, நடிகை அதிதி, நீ இவ்வளவு அழகாக கவிதை எழுதுவாய் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கமெண்ட் செய்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sidharth birthday wishes to partner aditi rao hydari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->