படத்திலும் எனக்கு ஜோடி இல்லை.. நிஜத்திலும் எனக்கு ஜோடி இல்லை.. புலம்பிய நடிகர் சிம்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு இந்த விழாவில் அழுது விடக்கூடாது என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளேன். இனிமே அழ மாட்டேன் எனக்கு வேண்டியதை ரசிகர்களாகிய நீங்கள் நிறையவே கொடுத்துட்டீங்க இனிமே சோகமான சீனே கிடையாது சந்தோஷம் மட்டும்தான் என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் படத்தில் கௌதம் கார்த்திக்கின் ஜோடி தான் பிரியா பவானி சங்கர். சாயிஷா ஒரு பாட்டுக்கு கௌதம் கார்த்தி உடன் குத்தாட்டம் போடுகிறார். இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. படத்திலும் துணை இல்லை நிஜத்திலும் துணை இல்லை என தனக்கு திருமணம் ஆகாது குறித்து மன வருத்தத்தில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor simbu speech in pathu thala movie audio launch


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->