கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ந்தேதி மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக கொண்டுவந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. 

தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். மேலும், விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத திரை பிரபலங்கள், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதன் பின், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் அவருடைய உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் சிலம்பரசன், அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor simbu tribute captain vijayakant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->