''2024 தீபாவளி'' கொண்டாட்டம்... ரிலீசாகும் ''அமரன்''! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal



ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தின் சிவகார்த்திகேயன் தனது 21 வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. 

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு ''அமரன்'' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ வீரர்களாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 'அமரன்' திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31  தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sivakarthikeyan Amaran movie release update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->