சூரி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


துரை செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும், படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப் படத்திற்கு 'கருடன்' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. அது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor soori new movie name released


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->