30 பெண்களை பணத்தாசை காட்டி பாலியல் பலாத்காரம்; 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்; மருந்துக்கடை உரிமையாளர் கைது..!
Drugstore owner who raped 30 women for money has been arrested
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்திவரும் திருமணமான அம்ஜத் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மருந்து கடைக்கு வரும் பெண்களை பணத்தாசை காட்டி, அவர்களுக்கு உதவுவது போல் நடித்து அவர்களை தனது வலையில் விழ வைத்துள்ளார்.
நாளைடைவில், அவர்களை தனக்கு சொந்தமான ஒரு வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு சம்மந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இவ்வாறாக அஜ்மத் 30 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சில பெண்கள் சென்னகிரி போலீசிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்திடமும் புகார் செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அஜ்மத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் 30 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருந்தது தெரியவந்துள்ளது.
அத்துடன், அவரது செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர். தற்போது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஆபாச வீடியோக்கள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், அந்த ஆபாச வீடியோக்களை யாரும் பகிரக்கூடாது என்றும், மீறி பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Drugstore owner who raped 30 women for money has been arrested