இனி தங்கத்தை விற்று உடனே பணம் பெற ஏடிஎம் போங்க..புதிய வசதியை அறிமுகம் செய்த சீனா!
Now sell your gold and go to the ATM to get money immediately China Introduces New Feature
சீனாவில் தங்க நகைகளை 30 நிமிடங்களில் விற்று பணம் பெற அனுமதிக்கும் ஏடிஎம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
மதிப்புமிக்க தங்கத்தை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அப்படி மதிப்புமிக்க தங்கத்தின் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, ஆனாலும் அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி தான் வருகின்றனர்.
ஒரு சில நடுத்தர மக்கள் தங்கத்தை சிரமத்திற்கு ஆளாகும் நேரங்களில் அதை அடகு வைத்தோ வித்தோ பயன்படுத்திக் கொள்கின்றனர். தற்போது தங்கத்தை விற்பனை செய்ய வேண்டுமானால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை சரி செய்யும் விதமாக சீனாவில் ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .தங்க வர்த்தகத்தில் உயர் தொழில்நுட்ப விருப்பமாக சாங்காயில் ஒரு மாலில் தங்க நகைகளை 30 நிமிடங்களில் விற்று பணம் பெற அனுமதிக்கும் ஏடிஎம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதில் தங்கத்தை விற்க விண்ணப்பம், கையொப்பம் என்று எதுவுமே தேவையில்லை என்பது கூடுதல் தகவல்,
சீனாவின் கிங்ஹுட் குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம் தங்கப் பொருட்களை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடைபோட்டு, அவற்றின் தூய்மையை தீர்மானித்து, அதற்குச் சமமான தொகையை நேரடியாக விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூன்று கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கப் பொருட்களை குறைந்தபட்சம் 50 சதவீத தூய்மை நிலையுடன் ஏற்றுக்கொள்கிறது.அரை மணி நேரத்தில் 36,000 யுவான்களுக்கு மேல் ஒருவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Now sell your gold and go to the ATM to get money immediately China Introduces New Feature