இரும்புக் கை மாயாவியா? ரோலக்ஸா? நடிகர் சூர்யா பேட்டி! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போது விஜயுடன் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். 

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும் போது அவர் தெரிவிக்கையில், தன் கனவு படமாக 'இரும்புக்கை மாயாவி' இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் சூர்யாவை 'மாநகரம்' திரைப்படத்திற்கு பின் 'இரும்புக் கை மாயாவி' என்ற படத்தில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்க உள்ளார். 

ஆனால் இது சூப்பர் ஹீரோ கதை என்பதால் படத்தின் உருவாக்க சவால்களால் அதனைக் கைவிட்டார். இந்த படம் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகும் என தெரிவித்துள்ளார். 

ரஜினி 171 படத்திற்காக திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. 

இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருப்பதாவது, ''விடுதலை 2 படபிடிப்பு முடிந்தது 'வாடிவாசல்' நடைபெறும். 

சூர்யா 42 அக்டோபரில் துவங்க உள்ளது. ரோலக்ஸ் கதை தனி படமாக உருவாக உள்ளது. இது குறித்து லோகேஷ் கதை தெரிவித்துள்ளார். 

அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் நடக்கும். 'இரும்புக்கை மாயாவி', ரோலக்ஸ் பிறகு நடக்கும்'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Surya Interview 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->