16 வயதில் ஹீரோயின் வாய்ப்பு... திரையுலகில் களமிறங்கும் பிரபல நடிகரின் மகள்! - Seithipunal
Seithipunal


16 வயதில் ஹீரோயின் வாய்ப்பு... திரையுலகில் களமிறங்கும் பிரபல நடிகரின் மகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோரின் வாரிசுகள் பள்ளி, கல்லூரி, நடிப்பு என்று தங்களது அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு முன்னேறி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் லைகா நிறுவனத் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "தன் கதையின் மீது லைகா போன்ற பெரிய நிறுவனம் நம்பிக்கை வைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றுத் தெரிவித்தார். இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் குழுவினர், நடிகர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவர வில்லை.

இருப்பினும் இந்தப் படத்தில், யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு பட்டியலைத் தயாரித்து, அதனை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த பட்டியலில்], விஜய்யின் மகன் இயக்குநரானது போல அஜித், சூர்யா, விக்ரம் என்று இவர்களது வாரிசுகளும் விஜய்யின் மகன் இயக்கத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று தங்களது விருப்பத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சூர்யா-ஜோதிகாவின் 16 வயது மகள் தியா கதாநாயகியாகவும், துருவ் விக்ரம் கதாநாயகனாகவும், ஏ.ஆர். ரஹ்மானின் வாரிசான அமீன் இசையமைப்பாளராகவும் கூட்டணி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya jothika daughter diya entered cinema


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->