"மகளுக்கு மாப்பிள்ளை பாக்க சொன்னா.. அவனுக்கே பொண்ணு பாத்துக்கிட்டான்" மகன் திருமணம் குறித்து நடிகர் தம்பி ராமையா !! - Seithipunal
Seithipunal



கடந்த ஜூன் 10ம் தேதி நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த் திருமணத்தில் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா கூறியதாவது, " நானும், தம்பி ராமையாவும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் அவர் தான் எனக்கு சம்பந்தியாக வருவார் என்று எனக்கு தெரியாது.

அதேபோல் உமாபதியை நான் தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக சென்ற போது பார்த்தேன். அங்கு அவர் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது அவர் தான் எனக்கு மருமகனாக வருவார் என்றும் எனக்கு தெரியாது. எனக்கு அவரை முன்பே தெரியும் என்பதால் என் மகள் உமாபதி பெயரை சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறினார்.

மேலும் தம்பி ராமையா கூறுகையில், " என் மகனிடம் என் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னேன். மகளுக்கு பார்த்ததைப் போலவே அவன் வாழ்க்கையையும் அவனே பார்த்துக் கொண்டான். ஐஸ்வர்யா எங்களுக்கு மருமகள் இல்லை மகள். அதேபோல் எங்கள் குடும்பத்தை ஒரு தாயாக வழி நடத்தப் போவதும் ஐஸ்வர்யா தான் " என்று நெகிழ்ச்சியாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Thambi Ramaiah Speaks About His Sons Marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->