யார் அழுதாலும் நான் அழமாட்டேன் - பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் நடிகை திரிஷா பேச்சு.! - Seithipunal
Seithipunal


யார் அழுதாலும் நான் அழமாட்டேன் - பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் நடிகை திரிஷா பேச்சு.!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘வெளியான படம் பொன்னியின் செல்வன் பாகம் 1". இதில், முன்னணி நடிகர்களான கார்த்தி, விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது "பொன்னியின் செல்வன் பாகம் 2" நாளை வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் அது நிறைவு பெற்றுள்ளது.

அப்போது நடிகை த்ரிஷா பேசியதாவது, “புரமோஷன் பணிகளை சென்னையில் தொடங்கி சென்னையில் முடிக்கிறோம். மக்களிடையே இந்தப் படத்தின் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. மணிரத்னத்தின் ‘குந்தவை’ நான் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உள்ளது.

பொன்னியின் செல்வன் படக்குழுவினர் எனக்கு சிறந்த நண்பர்களாக உள்ளனர். முன்னணி நடிகர்களான கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இன்று எங்கள் குழுவில் யார் அழப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், நான் நிச்சயம் அழமாட்டேன். இந்தப் படத்தில் பணி புரிந்தது என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத இனியமையான அனுபவமாக இருக்கும்” என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor trisha speach ponniyin selvan promotion in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->