சர்ப்ரைஸ் கொடுத்த உமாபதி - பிறந்தநாளில் அதிர்ந்து போன அர்ஜுன் மகள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகள் உமாபதிக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

ஐஸ்வர்யா ’பட்டத்து யானை’, ’சொல்லிவிடவா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதேபோல், உமாபதியும் ’அதாகப்பட்டது மகாஜனங்களே’, ’மணியார் குடும்பம்’, ’தண்ணி வண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

இவர் நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களமிறங்கினார். இந்த நிகழ்ச்சி மூலம் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து, இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்கு உமாமபதி செம ரொமான்டிக்கான சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதாவது, பிறந்தநாள் அன்று நள்ளிரவில் ஐஸ்வர்யாவுக்கு கேக் வெட்டி வானில் வாணவேடிக்கை நிகழ்த்தியுள்ளார். 

பின்னர் பிறந்தநாளன்று பாரா டைவிங் மற்றும் ரொமான்டிக்கான பாடல்களை குழுவாக பாடியும் ஐஸ்வர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை காதலர் தினமான இன்று பகிர்ந்து, ‘இதுதான் என்னுடைய சிறந்த பிறந்தநாள்’ என்று ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor umapathi surprice gift to arjun daughter aiswarya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->