எதிர் நீச்சல் தொடரின் அடுத்த AGS என்னதான் கேட்டாங்க.! மனம் திறந்த பிரபல நடிகர்? - Seithipunal
Seithipunal


எதிர் நீச்சல் தொடரின் அடுத்த AGS என்னதான் கேட்டாங்க.! மனம் திறந்த பிரபல நடிகர்?

பிரபல தொலைக்காட்சியான சன் டீவியில் ஒளிபரப்பான தொடர் 'எதிர்நீச்சல்'. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருடைய இந்த எதிர்பாராத மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில் ஒரு திருப்புமுனை அமையும் காலகட்டத்தில் மாரிமுத்து இறந்திருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் எனப்படும் AGS கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில், எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.

 

இது தொடர்பாக பேசிய வேல ராமமூர்த்தி, "அவரும், மாரிமுத்துவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததாகவும், அந்தப் படத்தில் இவருக்குச் சகோதரனாக மாரிமுத்து நடித்ததாகவும், அப்போது, தன்னிடம் சேனல் தரப்பிலிருந்து அடுத்த ஆதி குணசேகரனாக நடிப்பதற்கு பேசியதாகவும், ஆனால் தற்போது சினிமாவில் பிஸியாக இருப்பதால், சீரியலுக்கு நேரம் கொடுக்க முடியுமா? என்று தெரியாது என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடப்பது உண்மைதான், ஆனால், அது தொடர்பாக இன்னும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vela ramamoorthy says act in adi gunasekaran charecter at ethirneechal serial


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->