அதிகாலையிலேயே அதிர்ச்சி.! பிரபல நடிகரின் 16 வயது மகள் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


அதிகாலையிலேயே அதிர்ச்சி.! பிரபல நடிகரின் 16 வயது மகள் தற்கொலை.!

சினிமாவில் இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர் , பாடலாசிரியர், ஆடியோ பொறியாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாலர் என்று பன்முகத் திறமையைக் கொண்டவர் விஜய் ஆண்டனி.

இவருடைய மனைவி பாத்திமா. இவர்களுக்கு லாரா என்ற பதினாறு வயது மகள் உள்ளார். 12ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், லாரா இன்று அதிகாலை மூன்று மணியளவில், சென்னை, டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், லாராவின் இறப்பு செய்தியைக் கேட்டு திரை பிரபலங்கள், அவரது நண்பர்கள் என்று பலரும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay antony daughter lara sucide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->