ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் 'எஸ்கே 23' படம் தீபாவளி ரிலீஸ்..?
Sivakarthikeyans SK 23 film to be released during Diwali
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். 'அமரன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'எஸ்கே 25' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் 23-வது திரைப்படத்தில் அவருடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு 'சிங்க நடை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்பட்டது. தற்போது இந்த படம் 2025 தீபாவளிக்கு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
Sivakarthikeyans SK 23 film to be released during Diwali