அஜித் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..நடிகர் பிருத்விராஜ் பேட்டி!
I am eagerly waiting for Ajith's film. Actor Prithviraj Interview
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது.இந்தநிலையில் ‘விடாமுயற்சி’ பட குழுவிற்கு நடிகர் பிருத்விராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் மோகன்லால், பிருத்விராஜ், நடிகை மஞ்சுவாரியர், டோவினோ தாலமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் மார்ச் 27-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை பிருத்விராஜ் இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது தனி கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், எல் 2 எம்புரான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பாபி தியோலின் பிறந்த நாளில் ரிலீஸ் தேதியை உறுதி செய்த 'ஹரி ஹர வீர மல்லு' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் பிருத்விராஜ் பேசுகையில், "சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த சிறந்த டிரெய்லர்களுள் ஒன்று 'விடாமுயற்சி' டிரெய்லர் என்றும் அந்த படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்' என கூறினார்.
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
English Summary
I am eagerly waiting for Ajith's film. Actor Prithviraj Interview