சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு; உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி..!
Petitions against Udhayanidhi Stalin who spoke on Sanadhanam dismissed
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் 03 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்து. இந்நிலையில், வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றுள்ளனர்.
அந்த மனுக்களில் உதயநிதியின் பேச்சை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கவும், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Petitions against Udhayanidhi Stalin who spoke on Sanadhanam dismissed