பிரபல நடிகர், தயாரிப்பாளர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்.! அதிர்ச்சியில் திரையுலகம்.!
Actor Vijay Babu
திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு, கேரள மாநிலத்தின் விருதையும் பெற்றுள்ளார். மேலும் வெற்றிப் படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/fwefweffw.png)
இந்நிலையில், நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை அந்த இளம்பெண்ணை உடல்ரீதியாக தாக்கியும், பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜய்பாபு மீது அந்த இளம்பெண் கடந்த 22ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/fawsdgeaweg.png)
அவரின் அந்த புகார் மனுவில், தனக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்குவதாக கூறிm எர்ணாகுளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜய்பாபு தன்னை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், நடிகர் விஜய்பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/sfwefgwg.png)
இதற்கிடையே நடிகர் விஜய்பாபு, இளம்பெண் அளித்த பாலியல் புகாரை மறுத்து, முகநூல் நேரலையில் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.