நடிப்புக்கு 3 ஆண்டுகள் பிரேக்.? 2026 தேர்தலுக்கு தயாராகும் நடிகர் விஜய்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 வது படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல் வெளியானது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என நடிகர் விஜய் நிபந்தனை விதித்த பிறகு படத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இதற்கு காரணம் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அடுத்த 3 ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து நடிகர் விஜய் விலகி, தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கோடம்பாக்கம் வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன. நடிகர் விஜய்யின் இந்த தற்காலிக முடிவு வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை பொறுத்து முழு நேர அரசியலில் ஈடுபடுவதா அல்லது மீண்டும் திரைப்படங்களை நடிப்பதா என்பது குறித்து நடிகர் விஜய் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay decide 3 years break from acting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->