இயக்குனர் மாரி செல்வராஜ்- ற்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு! - Seithipunal
Seithipunal


தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாழை'. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

கடந்த 23-ந் தேதி இந்த படம் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் இந்த படம்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி 'வாழை' படத்தினை பார்த்து விட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, 'வாழை' மிகவும் அற்புதமான திரைப்படம். படம் முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் அதற்குள்ளேயே இருக்கிறேன். இந்த மாதிரியான படத்தினை இயக்கியதற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. 

மக்கள் அனைவரும் இந்த படத்தினை திரையங்குகளில் சென்று பார்த்தால் ஒரு அற்புதமாக அனுபவம் கிடைக்கும் என்று தன் உணர்வை பெரும் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்ட  நடிகர் விஜய் சேதுபதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay Sethupathi praises director Mari Selvaraj


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->