நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ பட முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


முதல் நாளில் உலகம் முழுவதும் நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் ரூ.126.32 கோடி வசூல் செய்துள்ளது.

நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் திரைப்படத்தில் விஜயுடன் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம்,மீனாட்சி சவுத்ரி, சிநேகா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில் இப்படத்தை  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் நேற்று (செப்.5) உலகமெங்கும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த படம் குறித்து சில தரப்பினர் கதை பலவீனமாக இல்லை எனவும்  யுவன் இசை சரி இல்லையென்றும் இப்படம்  கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்படும் இந்த ‘தி கோட்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. 

 இதற்கு முன்னதாக வெளியான நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடியை வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijays film The Goat first day collection Do you know how much


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->