கோட் படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா ? - உண்மையை உடைத்த அர்ச்சனா கல்பாத்தி! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். இந்தப் படத்தில் விஜயுடன் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு நேற்று முன் தினம் தொடங்கப்பட்டதையடுத்து, ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர். 

இதற்கிடையே, கோட் படத்தின் நான்காவது பாடல் "மட்ட"  நேற்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “பிகில் திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவானதாகவும், இப்படம் வெளியாகி 5 ஆண்டுகளே ஆனாலும் நடிகர் விஜய்யின் மார்க்கெட் பிரம்மாண்டாக வளர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ‘கோட்’ திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதை பாதி நடிகர் விஜய்யின் சம்பளம் என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijays salary in the film Code is so much crores Archana Kalpathi who broke the truth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->