கே.ஜி.எஃப் பட யாஷின் ரசிகர்கள் மீதான அக்கறையால் வியப்பு.! ஆச்சர்யத்தை கொடுத்த தகவல்.!  - Seithipunal
Seithipunal


கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து. கே ஜி எஃப்இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த  14ஆம் தேதி கே ஜி எஃப்  இரண்டாம் பாகம் வெளியானது. 

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷ், அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் கே ஜி எஃப் 2-ஆம் பாகம் வெளியானது.  கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் நடிகர் யஷ் நடிக்கின்ற விளம்பரங்களைக் நிர்வகிக்கும் அர்ஜுன் பானர்ஜி என்ற நபர், "சமீபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா விளம்பர வாய்ப்பு நடிகர் யஷ்க்கு கிடைத்தது. ஆனால், அதை அவர் மறுத்து விட்டார். ரசிகர்களை தவறாக வழிநடத்த கூடாது என்பதில் யஷ் உறுதியாக இருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor yash skip pan masala ad 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->