'தி கேரளா ஸ்டோரி' பட நடிகைக்கு என்ன ஆச்சு.? மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த நடிகை அதா ஷர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான அதா ஷர்மா தமிழில் நடிகர் சிம்புவின் இது நல்ல ஆளு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதில் கடந்த மே மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதா சர்மா நடித்திருந்தார். இந்த திரைப்படம் கேரளாவில் காணாமல் போன இளம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் முஸ்லிம்களை தவறாக காட்டியதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக அதா ஷர்மா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதா ஷர்மா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவருக்கு வயிற்று போக்கு மற்றும் உணவு செரிமானம் போன்ற பிரச்சினைகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress adah Sharma admitted hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->