Aishwarya Lekshmi: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் புதிய வெப் தொடர்! - Seithipunal
Seithipunal


ஐஸ்வர்யா லட்சுமி புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் மோசு என்பவர் இயக்குகிறார்.

நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கும் புதிய வெப் தொடர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இதற்கு நல்ல பெயரை பெற்று தந்தது

மேலும் இவர் தெலுங்கிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அடுத்ததாக இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதே சமயம் ஐஸ்வர்யா லட்சுமி புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் மோசு என்பவர் இயக்குகிறார். இந்த வெப் தொடருக்கு தீவினை போற்று என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் தொடரின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு 40 நாட்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெற இருக்கின்றன. இதனை யாலி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'தீவினை போற்று' வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Aishwarya Lekshmi's new web series!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->