ஏகனாபுரம்: 11வது முறையாக தீர்மானம்!
Paranthur Airport Eknapuram
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இத்திட்டத்திற்கு எதிராக 11வது முறையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்..
பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் அப்பகுதி மக்கள் 915 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில், விமான நிலைய திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதையும், இடிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படாததையும் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
English Summary
Paranthur Airport Eknapuram